HomeCinema'எம்புரான்' பட டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு வாழ்த்து!

‘எம்புரான்’ பட டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு வாழ்த்து!

Published on

நடிகர் மோகன்லால், பிரித்திவிராஜ் கூட்டணியின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான ‘எம்புரான்’ படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வழியே வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ஐமேகஸ் பதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரெய்லரை வெளியிட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ‘எனது அருமை நண்பர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் ‘எம்புரான்’ பட டிரெய்லரை கண்டு ரசித்தேன், மிக அற்புதமான டிரெய்லர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும், படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அதிரடியான விஷுவல் விருந்தாக அமைந்துள்ளது, லூசிபர் படத்தின் கதையிலிருந்து துவங்கும் இந்த டிரெய்லர், மொத்த அரசியல் சூழல் மற்றும் அதிரடி த்ரில்லர் கதைக்களத்தை நோக்கி நம்மை இழுக்கிறது. கதை, ஸ்டீபன் நெடும்பள்ளி என்கிற குரேஷி ஆப்ரஹாம் உண்மையில் யார் என்பதைச் சுற்றி நகர்கிறது. ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ ஆனாலும், இந்திய அரசியலின் முக்கிய தலைவராகக் கொண்டாடப்படும் ஸ்டீபன், எப்படி இவ்வளவு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுகிறார்? அவருக்குச் சர்வதேச கடத்தல் குழுவுடன் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த சுவாரஸ்யமான கேள்விகளுக்குத் திரைப்படம் பதில் அளிக்கும் என தெரிகிறது.

Latest articles

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் அண்டர் – 18 படம் பூஜையுடன் துவங்கியது!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்...

தனி ஒருவன்’ இரண்டாம் பாகம் வராதது ஏன்? -‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் காரணம் சொன்ன ரவிமோகன்

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின்...

பிரபல ஒளிப்பதிவாளர் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘ரஞ்சன்’ படக்குழு!

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் 'ரஞ்சன்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று...

More like this