HomeCinema'பிண்டு கி பப்பி' படத்தின் தமிழ் வெர்சன் 'கிஸ் கிஸ் கிஸிக்' என்ற பெயரில் மார்ச்...

‘பிண்டு கி பப்பி’ படத்தின் தமிழ் வெர்சன் ‘கிஸ் கிஸ் கிஸிக்’ என்ற பெயரில் மார்ச் 21-ல் ரிலீஸாகிறது!

Published on

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி பொழுதுபோக்குப் படமான ‘பிண்டு கி பப்பி’ இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ‘கிஸ் கிஸ் கிஸிக்’ என்ற பெயரில் வரும் மார்ச் 21-ம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது.

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8-ம் தேதி வெளியானது.

காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான பிண்டு கி பப்பி கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது. அவன் ஒரு உற்சாகமான இளம் பெண்ணைச் சந்திக்கையில், அவன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு முழுமையான என்டர்டெயினராக அனைத்து அம்சங்களுடன் கூடிய காமெடிப் படமாக, இப்படம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.

படத்தில் சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ். சோனி, ஊர்வசி சௌஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

படம் பற்றி பேசிய தயாரிப்பாளர் விதி ஆச்சார்யா “பிண்டு கி பப்பி” படத்தை உருவாக்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரை ஒன்றிணைத்து உருவான திரைப்படம், மேலும் நாங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை திரையில் பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this