HomeCinemaகன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' தமிழ், மலையாள மொழிகளில் SUN NXT தளத்தில்...

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ள ‘பைரதி ரணகல்’ தமிழ், மலையாள மொழிகளில் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!

Published on

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஆக்சன் அதிரடி திரைப்படமான ‘பைரதி ரணகல்’ படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் ‘பைரதி ரணகல்.’ இப்படம் தான் தமிழில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் ‘பத்து தல’ படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மஃப்டி படத்தில், பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவாராஜ்குமார் நடித்திருந்தார். இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து உருவான படம் இது.

ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை. அதிரடி ஆக்சன் படமாக, கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவராஜ்குமார், முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாரட்டுக்களைக் குவித்த இப்படம், கன்னட மொழியில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார்.

 

Latest articles

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

மாடர்ன் கல்யாணத்தின் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைதளங்களில் வைரல்!

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’...

More like this

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...