HomeCinemaபழம்பெரும் இயக்குநர் கே ரங்கராஜ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' மார்ச்...

பழம்பெரும் இயக்குநர் கே ரங்கராஜ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ மார்ச் 14-ல் ரிலீஸ்!

Published on

ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடித்துள்ள ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளது.

உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை இயக்கிய கே .ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

படத்தில் இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதானமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைத்து உருவாக்கியுள்ளோம்.

கிளைமாக்ஸ் காட்சிகாக உண்மையான கிளைடர் பயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம்பிடித்துள்ளோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய குடும்ப பாங்கான, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றது. படம் வரும் மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு – MY INDIA மாணிக்கம்
வசனம் – பி என் சி கிருஷ்ணா
ஒளிப்பதிவு – தாமோதரன்.டி
இசை – ஆர் கே சுந்தர்
எடிட்டிங் – கே.கே
பாடல்கள் – காதல் மதி
கலை – விஜய் ஆனந்த்
நடனம் – சந்துரு
ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
ஸ்டில்ஸ் – தேனி சீனு
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this