HomeMovie Reviewவிடாமுயற்சி சினிமா விமர்சனம்

விடாமுயற்சி சினிமா விமர்சனம்

Published on

கதைநாயகன் அர்ஜுன். அவனுடன் 12 வருடங்கள் வாழ்ந்து, அவனை விட்டுப் பிரியும் முடிவுக்கு வந்திருக்கிற மனைவியை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அவளை மீட்பதற்காக அந்த கும்பல் கேட்ட கோடிக்கணக்கான ரூபாயை கொடுக்கிறான் அர்ஜுன். அதை வாங்கிக்கொண்டு ‘கடத்தச் சொன்னதே உன் மனைவிதான்’ என்று அர்ஜுனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அந்த கும்பல் அடுத்ததாக அர்ஜுனை கொல்லவும் தயாராகிறது.

இப்படியான சம்பவங்கள் படத்தின் முன்பாதியை ஆக்கிரமித்துக் கொள்ள, மனைவியை மீட்பதற்கான அர்ஜுனின் முயற்சிகளும் அதில் அவன் படுகிற அவஸ்தைகளுமாய் வேகமெடுக்கிறது ‘விடாமுயற்சி’யின் திரைக்கதை.

கடத்தியவர்கள் யார், கடத்தலின் உண்மையான நோக்கம் என்ன என்பதெல்லாம் காட்சிகளாக விரிய, ‘அந்த கும்பலிடமிருந்து அர்ஜுன் தன் மனைவியை மீட்பது சத்தியமாய் சாத்தியமில்லை’ என்ற நினைப்பு நம் மனதிற்குள் உருவாகி படபடப்பு கூடுகிறது…

நம்மூர் சினிமா வழக்கப்படி இப்படிப்பட்ட கதைகளில் கதாநாயகன் தோற்பதில்லை. இந்த கதையின் முடிவும் அதேதான் என்றாலும் அவன் எப்படி தன் மனைவியை மீட்கிறான் என்பதில் பரபரப்பை அதிகரித்து அதகளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

அர்ஜுனாக பத்மபூஷன் அஜித். கடத்தல்காரர்கள் போட்டுப் பொளக்கிறபோது ‘திருப்பி நாலுபோடு போட்டு அவனுங்களை அலறவிடாம ஏன்யா இப்படி அடிவாங்கிச் சாகுறே’ என கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ரத்தம் சிந்தி, பின்னர் வில்லன்களை போட்டுப் புரட்டும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்துக்கு கேரண்டி தருகிறது. மனைவி மீதான காதலில், கடத்தப்பட்ட பின் பரிதவிப்பில்  தேர்ந்த நடிப்பைத் தந்திருப்பவர், பாலைவனம் போன்ற பகுதியில் காரில் சீறும்போதும் பாடலுக்கு ஆடும்போதும் வெளிப்படுத்தும் எனர்ஜி எக்கச்சக்கம்.

திரிஷா எப்போதும்போல் அழகாக இருக்கிறார்; எப்போதும்போல் காதல் உணர்வுகளை கடத்துகிறார். அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும்படியான காட்சிகளில் பொருத்தமான நடிப்பை பரிமாறுகிறார்.

அஜித்தை தாறுமாறாய் அடித்து நொறுக்கும்போது பவர்ஃபுல்லாக இருக்கிறது ஆக்சன் கிங்’ அர்ஜுனின் வில்லத்தனம். அவருடன் இணைந்து மிரட்டியிருக்கிறார்கள் ரெஜினா கஸான்ட்ராவும் ஆரவ்வும்.

மற்ற நடிகர் நடிகைகள் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, ஸ்வதீகா பாடலை ஆட்டம்போடத் தூண்டும் விதமாக தந்து, பின்னணி இசையில் அதிரடியாக செயல்பட்டிருக்கிறார் அனிருத்.

அசர்பைஜானின் மணல் மேடுகள் சூழ்ந்த அகன்று விரிந்த பகுதிகளும் அதிலிருக்கும் நீளமான சாலைகளும் பார்க்க அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம். அதை அப்படியே வாரிச் சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.

கடத்தல் தொழிலை புத்திசாலித்தனமாக செய்கிற சைக்கோக்களிடம் கதைநாயகனும் நாயகியும் சிக்கி சின்னாபின்னமாகிற கதையை எடுத்துக் கொண்டு, அதை ஆடியன்ஸுக்கு பல்ஸ் எகிற வைக்கும் விதமாக உருவாக்கிய ‘விடாமுயற்சி’ வெற்றியை தட்டிப் பறித்திருக்கிறது!

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this