HomeCinemaஸ்ருதிஹாசன் டயானாவாக நடிக்கும் 'தி ஐ' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!

ஸ்ருதிஹாசன் டயானாவாக நடிக்கும் ‘தி ஐ’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!

Published on

கலையுலகின் பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ஐ ‘ ( The Eye) எனும் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன், மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, ‘அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் எங்களின் ‘டயானா’வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த ‘தி ஐ’ படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம்@ ஸ்ருதிஹாசன் ” என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன்- டயானா கதாபாத்திரத்தில் நீல வண்ணத்தில் கழுத்தை மூடிய ஸ்வெட்டர் அணிந்து கவலையுடன் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நடிகை ஸ்ருதிஹாசன், மூன்று ஹாட்டின் இமோஜிகளுடன், ‘நன்றி என் அன்பானவர்களே ‘ என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கோலிவுட் நட்சத்திரமான ஸ்ருதிஹாசனுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘தி ஐ’ ( The Eye) எனும் ஹாலிவுட் படத்திலும், நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்திலும், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ட்ரெயின்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this