HomeUncategorizedசீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2' மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

Published on

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ்- டீசர் – ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சீயான் விக்ரம் – இயக்குநர் அருண்குமார் – தயாரிப்பாளர் ரியா ஷிபு கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாலும், முதலில் ‘வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ‌. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this