HomeCinemaகிராமத்துப் பின்னணியில் அப்புக்குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' பிப்ரவரியில் ரிலீஸ்! அசத்தலான போஸ்டரில் அறிவிப்பை வெளியிட்டது...

கிராமத்துப் பின்னணியில் அப்புக்குட்டி நடிக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ பிப்ரவரியில் ரிலீஸ்! அசத்தலான போஸ்டரில் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.

Published on

அப்புகுட்டி நடித்துள்ள ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ திரைப்படத்தை கிராமத்துப் பின்னணியில் அழுத்தமான சமூகக் கருத்துடன், வித்தியாசமான ஃபேண்டஸி டிராமாவாக இயக்கியுள்ளார் ராஜு சந்ரா. மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கிய ராஜு சந்ராவின் முதல் தமிழ்ப் படம் இது.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. அதையடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கல் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளது படக்குழு.

அதில் கிராமத்து வீட்டுப் பின்னணியில், அன்பான விலங்குகளுடன், கதைநாயகன் அப்புகுட்டி கர்ப்பிணி மனைவியை அணைத்தபடி இருப்பது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தேசியவிருது நாயகன் அப்புக்குட்டி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டாக்டர் உட்பட பல வெற்றிப் படங்களில், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஸ்ரீஜாரவி, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா அனில்குமார், ரோஜி மாத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, நீலா கருணாகரன், ,சுல்பியா மஜீத், இன்பரசு, ராகேந்து, விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு, வினு அச்சுதன், பக்தவல்சலன், அமித் மாதவன், விபின் தேவ், வினீத் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி, ஆழியார் டேம், கேரளாவிலுள்ள வாகமன் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. பட வெளியீட்டுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படக் குழு:-
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் – ராஜுசந்ரா
தயாரிப்பு – Plan3 Studios
இணை தயாரிப்பு – MATHENS GROUP
இசை – ஜி கே வி, நவனீத்
எடிட்டர் – தாஹிர் ஹம்சா
இணை இயக்குநர் – பினு பாலன்
கலை இயக்கம் – வினோத் குமார்
உடை வடிவமைப்பு – சுல்பியா மஜீத், பக்தவச்சலன்
நடனம் – சதீஷ்
மக்கள் தொடர்பு – வேலு

Latest articles

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

More like this