HomeCinemaமஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன் இருவரையும் இணைக்கும் கே.வி.என். புரொடக்ஷன்ஸ்! கைகோர்க்கும்...

மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன் இருவரையும் இணைக்கும் கே.வி.என். புரொடக்ஷன்ஸ்! கைகோர்க்கும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ்.

Published on

வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சைலஜா தேசாய் ஃபென்னின் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன.

படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார்.

படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா பேசும்போது, “எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம் மூலம் நாங்கள் மலையாள திரையுலகில் களமிறங்குகிறோம். ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் பிரமாண்டம் மற்றும் சிறப்பான கதையம்சம் இந்தப் படத்தில் இருக்கும். மிகவும் தலைசிறந்த குழுவுடன் இணைவதால், அந்த விஷயத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் சிதம்பரம் பேசும் போது, “கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், இந்த குறிக்கோளை நிஜமாக்கும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை,” என்றார்.

எழுத்தாளர் ஜித்து மாதவன் கூறும் போது, “இந்தக் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான ஒன்றை உருவாக்குவோம் என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என்றார்.

2025 ஆம் ஆண்டு துவங்கும் இந்த வேளையில் கே.வி.என். நிறுவனம் கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், தமிழில் விஜய்யின் தளபதி 69, இந்தி மொழியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படங்களுடன் தற்போது மலையாள துறையிலும் கால்பதிக்கிறார்கள். இதன் மூலம் கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் பலம் கூடுவதோடு, பொழுதுபோக்கு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது.

இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்: ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர்.

Latest articles

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர்...

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

More like this