HomeCinemaகிரைம் திரில்லராக உருவான 'டெக்ஸ்டர்' மூன்று மொழிகளில் ரிலீஸுக்கு தயாராகிறது!

கிரைம் திரில்லராக உருவான ‘டெக்ஸ்டர்’ மூன்று மொழிகளில் ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் எஸ் வி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ள, கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் சூரியன்.ஜி இயக்கியுள்ள படம் ‘டெக்ஸ்டர்.’

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடிப் கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அவனிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா? என்பதை திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பான திரைக்கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

படத்தில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகன்களாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வில்லன்களாக ஹரிஷ் பெரடி நடிக்க, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் ‘யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ’ என்ற மனதை வருடும் பாடலும், ‘மிளிரும் பின்னாலி சுழலும் விழிகாரி…எனும் துள்ளலிசை பாடலும் இடம்பெற்றுள்ளன.

படப்பிடிப்பு குடகு மலை, கே ஜி எஃப், ஓசூர், வயநாடு உள்ளிட்ட இடங்களில் 45 நாட்களில் இரு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. படத்தை வரும் பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படக்குழு:-
கதை – சிவம்
திரைக்கதை, வசனம், இயக்கம் -சூரியன் ஜி
ஒளிப்பதிவு –ஆதித்ய கோவிந்தராஜ்
இசை – ஸ்ரீநாத் விஜய்
பாடல்கள்- மோகன்ராஜன்
படத்தொகுப்பு – ஸ்ரீனிவாஸ் பி.பாபு
சண்டைப் பயிற்சி – அஷ்ரப் குருக்கள், கே.டி வெங்கடேஷ்
நடனம் – சினேகா அசோக்
எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்ஸ் –
ஷார்வாக் வி என், ஹர்ஷா என்
மக்கள் தொடர்பு – வெங்கட்

Latest articles

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர்  சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய 'சினிமாவின் ஆன்மா'...

More like this