HomeCinemaசரத்குமார் சார் இந்த படத்தில் டைரக்சன் டீம் மாதிரி வேலை பார்த்தார்! -'தி ஸ்மைல் மேன்'...

சரத்குமார் சார் இந்த படத்தில் டைரக்சன் டீம் மாதிரி வேலை பார்த்தார்! -‘தி ஸ்மைல் மேன்’ பட நிகழ்வில் இயக்குநர் ஷ்யாம் பெருமிதம்

Published on

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்துள்ள 150 வது படம் ‘தி ஸ்மைல் மேன்.’ இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கியுள்ள இந்த படம் டிசம்பர் 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் சரத்குமார், ”இந்தப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில் கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இதுதான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி.

சுரேஷும் நானும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரவீன், ”மெமரீஸ் படம் தான் எங்கள் முதல் படம் அதற்கு நெகடிவ், பாஸிடிவ் என கலவையான விமர்சனங்கள் வந்தது. அடுத்து என்ன படம் பண்ணலாம் என விவாதித்தோம். ஆல்கெமிஸ் பிரதருடன் பேசி, ஒரு நல்ல திரில்லர் கதையை உருவாக்கினோம். சரத்குமார் சாரிடம் பேசினோம் அவருக்குப் பிடித்திருந்தது. ஐந்து மாதங்கள் கழித்துத் தான் ஷூட் செய்தோம், ஆனால் கதையில் ஒரு ஃபுல் ஸ்டாப் விடாமல், ஞாபகம் வைத்திருந்தார். நாங்கள் புது டீம் என்றாலும் முழு ஒத்துழைப்பு தந்தார். தொழில் நுட்ப கலைஞர்கள் டீம் அனைவரும் அவர்கள் படமாக நினைத்து, கடினமான உழைப்பைத் தந்தார்கள். இது ஒரு பக்காவான திரில்லர் படம். ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் நன்றி” என்றார்.

இயக்குநர் ஷ்யாம், ”இந்தக்கதையில் சரத்குமார் சார் வேடம் நிதானமானது, அவர் ஆக்சன் படம் செய்பவர். அதனால் அவரிடம் பேசத் தயங்கினோம். சரத்குமார் சார் கதை கேட்டதும் ஆர்வமாகி, உடனே ஒப்புக்கொண்டார். அவரே டைரக்சன் டீம் மாதிரி தான், வேலை பார்த்தார். அவருடைய 150 வது படம். எங்களுக்குத் தந்ததற்கு நன்றி.

கமலா ஆல்கெமிஸ் எழுத்தாளர் மட்டுமில்லை. இப்படத்தில் இணை இயக்குநரும் கூட. அவரின் அமேசான் தொடர் முடிந்த பின்னும் வந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டார். விக்ரம் மோகன் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். எல்லோருமே பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நடிகர்கள் அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். பிரவீன் 16 வருட நண்பர், அவருடன் இணைந்து தான் எப்போதும் படம் செய்வேன். இந்தப் படம் க்ரைம் மிஸ்டரி டிராமா, நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.

திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ், ”எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 படங்களுக்கும் மேல் இருக்கும் திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க செய்தது. ஷ்யாமுக்கும் எனக்குமான நட்பு தனித்துவமானது. எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம். கதை இருந்தால் தான் ஞாபகங்கள் இருக்கும், ஞாபகங்கள் தான் எந்த ஒரு உயிரின் பரிணாம வளர்ச்சிக்கும் தேவை. இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் தந்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். பார்த்து ஆதரவு தாருங்கள், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.

நடிகை சிஜா ரோஸ், ”சரத்குமார் சாருடன் அவரது 150 வது படத்தில் நடித்தது மிகப் பெருமையாக உள்ளது. இப்படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இதற்கு முன் என்னை நிறைய ஹோம்லி கேரக்டர்களுக்குத் தான் அழைப்பார்கள். இப்படத்தில் சரத்குமார் சார் டீமில் இன்வஸ்டிகேடிவ் செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன்” என்றார்.

Latest articles

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணையும் ‘பிரௌன் மணி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani...

More like this

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...