HomeCinema‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மக்கள் செல்வன்...

‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

Published on

நான் லீனியர் பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி விறுவிறுப்பாக வெளியாகி உள்ள படம் தான் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. இதற்கு முன் அப்படி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் லோகேஷ் கனகராஜுக்கு முகவரி தந்த அவரது முதல் படமான ‘மாநகரம்.’

அந்தவகையில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’.படம் பார்த்த பலரும் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மீண்டும் ஒரு மாநகரம் படத்தை, அதேசமயம் வேறு ஒரு கதைக்களத்தில் வேறு ஒரு கோணத்தில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என்கிற கருத்தை தவறாமல் வெளிப்படுத்தினார்கள். இப்படி மவுத் டாக் மூலம் படம் பற்றிய செய்தி வெளியே பரவ, தற்போது திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவல் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் கவனத்திற்கும் சென்றது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தை பார்க்கும் ஆவல் எழவே அவருக்கு சிறப்பு காட்சியாக ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

படம் பார்த்த விஜய் சேதுபதியும் படக்குழுவினரை நேரில் அழைத்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். படத்தில் நடித்த கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this