HomeCinemaலவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது 'லவ் டுடே.' கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால்...

லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது ‘லவ் டுடே.’ கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் ‘ரிங் ரிங்.’

Published on

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் ‘மொபைல் போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலை உள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் கலந்து விட்டது. இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது. மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது. மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது.

அப்படி மொபைல் போனை மையமாக வைத்து ‘போனின்றி அமையாது உலகு’ என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

திருமணத்திற்கு முன்பு காதலர்கள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘லவ் டுடே’ என்றால் திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘ரிங் ரிங் .’

சக்திவேல் இயக்கியுள்ளார். இதற்கு முன் கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி என 3 படங்களை இயக்கியவர் இவர்.

படத்தில் விவேக் பிரசன்னா,சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப்,பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு நான்கு தம்பதிகள் போனை மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவையான, சுவாரஸ்யமான, மர்மங்கள் நிறைந்த, விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டு இந்த படம் உருவாகியிருக்கிறது. நான்கு தம்பதிகளுக்கான பின்புலம் நான்கும் தனித்தனியாக இருக்கும்.

சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் பெரிய வீடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக பெரிய அளவில் வீடு செட் போட்டும் படமாக்கி உள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார்.

படத்தை அடுத்த வருடம் ஜனவரி 3-ம் தேதி வெளியிடும் திட்டத்தோடு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல் தயாரித்துள்ளனர்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this