HomeCinemaசூர்யாவின் 'கங்குவா'வுடன் 'ஃபயர்' திரைப்படத்தின் டீசர்!

சூர்யாவின் ‘கங்குவா’வுடன் ‘ஃபயர்’ திரைப்படத்தின் டீசர்!

Published on

ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் டீசர், சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்துடன் நவம்பர் 14 முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

முன்னதாக, நவம்பர் 13 இன்று மாலை முன்னணி திரைப் பிரபலங்கள் ‘ஃபயர்’ டீசரை வெளியிட்டனர்.

‘ஃபயர்’ திரைப்படத்தை இதுவரை பார்த்துள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்சார் போர்டின் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் சென்சார் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சமுதாயத்திற்கு தேவையான துணிச்சலான கருத்துடன் உருவாகியுள்ள ‘ஃபயர்’, வயது வந்த அனைவரும் கட்டாயம் காண வேண்டிய படமாக அமையும்.

பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் ‘ஃபயர்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த ஜே எஸ் கே, “இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்,” என்றார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஃபயர்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்று ஜே எஸ் கே நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம் குமாரும் கலை இயக்கத்தை தேவராஜும் கையாள, பாடல்வரிகளை ‘கே ஜி எஃப்’ புகழ் மதுரகவி இயற்றியுள்ளார், மானஸ் நடனம் அமைத்துள்ளார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this