HomeCinemaராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் படத்தில் 'கட்சி சேர',...

ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் படத்தில் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ சாய் அபயங்கர்!

Published on

இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான ‘கட்சி சேர’ மற்றும் ‘ஆச கூட’ ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.

சுயாதீனப் படல்களை உருவாக்குவதோடு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், சி. சத்யா உள்ளிட்ட மிகப் பெரிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் எழுத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்கவிருக்கிறார். ‘ரெமோ’, ‘சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார்.

இதுபற்றி இசையமைப்பாளர் சாய் அபயங்கரிடம் கேட்டபோது, “இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ் கனகராஜ் சார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘பென்ஸ்’ போன்ற படத்திற்கு இசையமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு நான் ரசிகன். அவரின் யுனிவர்சில் இசையை உருவாக்குவது எனக்கு உண்மையிலேயே பெரிய கனவு. ராகவா லாரன்ஸின் திரைப்படங்களில் சிறந்த பாடல்கள் மற்றும் நடனத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். சிறந்த இசையை வழங்குவதற்கான எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இந்த படத்தில் என்னை தேர்வு செய்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கும் நன்றி” என்றார்.

சாய் அபயங்கரின் இசையுடன் வெளியிடப்பட்ட அற்புதமான ‘பென்ஸ்’ பட டீசர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான பல படங்களைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ரிலீஸுக்கு முன் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது...

பாண்டிராஜ் இயக்கியுள்ள திரில்லர் காமெடி டிராமா ‘பரிமளா & கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாண்டிராஜ் இயக்கியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா 'பரிமளா & கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே...

பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் 26 பேரை பற்றிய ‘காண்பதெல்லம் மறையுமென்றால்’ முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் வெளியீடு!

பத்திரிகை , இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என...

 ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திரங்களை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தினார்!

தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின்...

More like this