HomeMovie Reviewஅமரன் சினிமா விமர்சனம்

அமரன் சினிமா விமர்சனம்

Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன், நாட்டைக் காக்கும் ராணுவப் பணியில் உயிர்த் தியாகம் செய்த வரலாற்றின் திரை வடிவம்.

முகுந்தாக சிவகார்த்திகேயன். ராணுவத்தில் சேர வெண்டுமென்ற முகுந்தின் சிறுவயதுக் கனவு, தொடர் முயற்சியின் மூலம் தகுதியான வயதில் நிறைவேறுகிறது. அப்படி ராணுவ வீரனாக பணியில் சேர்ந்த முகுந்த் மேஜர் என்ற உயரதிகாரத்தை அடைந்து, பயங்கரவாத தாக்குதலில் 2014 ஏப்ரல் மாத இறுதியில் உயிரிழக்கிறார். இந்த அத்தனை உண்மைகளும் காட்சிகளாக விரிய அத்தனைக்கும் உடற்கட்டாலும் பொருத்தமான நடிப்பாலும் உயிர் தந்திருக்கிறார். ரொமான்ஸில் ஈடுபடும் காதலன், கரிசனம் காட்டும் கணவன், மகள் மீது பாசம் பரிமாறும் தந்தை என இன்னொரு பக்கம் நேர்த்தியான நடிப்பைக் கடத்தியிருக்கிறார்.

கதாநாயகனின் காதல் மனைவியாக சாய் பல்லவி. காதல், உற்சாகம், ஏக்கம், கோபம், இழப்பு, பரிதாபம் என காட்சிக்கு காட்சி வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கனமான பாத்திரத்தை இயல்பான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கும் அவர், கணவன் இறந்த செய்தி கேட்டு தான் அழாமல் தியேட்டரையே அழ வைத்திருப்பதுதான் தீபாவளியன்று திரையுலகுக்கு கிடைத்த தலைப்புச் செய்தி.

படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள்… அதையெல்லாம் நிரப்பியிருப்பவர்கள் சரியான தேர்வு; அவர்களிடமிருந்து கிடைத்திருப்பது கச்சிதமான நடிப்பு.

ஜீ வி பிரகாஷ் இசையில் ‘மின்னலே’ பாடல் கிறங்கடிக்கிறது. பின்னணி இசையில் காட்சிகளின் தேவைக்கேற்ப தென்றலும் வீசுகிறது; புயல்ப் பாய்ச்சலும் இருக்கிறது.

நாட்டின் எல்லைப் பகுதி, ராணுவ முகாம்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் நடக்குமிடம் என படத்தின் வலுவான காட்சிகள் சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் தரமாக அரங்கேறியிருக்கின்றன.

உண்மையான வரலாற்றுக்கு களங்கம் ஏற்படுத்திவிடாதபடி கொஞ்சமாய் சினிமாத்தனங்கள் சேர்த்திருக்கும் இந்த படைப்பின் மூலம், ராணுவ வீரர்களின் வாழ்க்கை, பணிச் சூழல் என விரிவாக காட்சிப்படுத்தி,

ராணுவம் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் மதிப்பை உயர்த்தியிருக்கிற ராஜ்குமார் பெரியசாமி, பிரமாண்டமான கமர்சியல் படங்களை தரமாக தருகிற இயக்குநர்களின் வரிசையில் இணைகிறார்.

வேறென்ன… வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் படக்குழு அடுத்ததாக, குவியப்போகும் விருதுகளை அடுக்கி அழகு பார்க்கத் தயாராகலாம்!

Rating 4 / 5

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this