HomeMovie Review'ஒற்றை பனைமரம்' சினிமா விமர்சனம்

‘ஒற்றை பனைமரம்’ சினிமா விமர்சனம்

Published on

ஈழத் தமிழர்கள் போரில் தோற்றாலும் அவர்களின் மனதிலிருக்கும் புரட்சித் தீ எப்போதும் அணையாது எனபதற்கு சான்றாக, அதே மண்ணில் வசிக்கும் ஒருவரின் வாக்குமூலமாக ‘ஒற்றை பனைமரம்.’

ஈழத்தில் நடந்த வாழ்வுரிமைப் போரில் உயிர் பிழைத்தவர்களில் சுந்தரம் என்ற நடுத்தர வயதுக்காரரும் கஸ்தூரி, அஜிதிகா என்ற இரு இளம் பெண்களும் இணைந்து வாழ்கிறார்கள்.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் தங்களைப் போன்றவர்கள் மீதான் சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அராஜகம் முடிவுக்கு வராததால், அவர்களை எதிர்க்க அமைப்பு ஒன்றைத் தொடங்க நினைக்கிறார் சுந்தரம். அவர் நினைத்ததை செய்ய முடிந்ததா என்பதே கதையின் மீதி… இயக்கம் புதியவன் ராசையா

படத்தின் இயக்குநரே சுந்தரம் என்ற கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். போரில் மனைவியை இழந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாதவராக, எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் அமைப்பு தொடங்குவதில் உறுதியாக இருப்பவராக தனது பாத்திரத்துக்குத் தேவையான கம்பீரத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

கதையின் நாயகி கஸ்தூரியாக நவயுகா குகராஜன். தைரியமான போராளியாக அறிமுகக் காட்சியில் மனதைக் கவர்பவர், ராணுவ முகாமில் சிங்களனின் காமப்பசிக்கு இரையாகி மீண்டு வரும்போது அவரது நிலை கலங்கடிக்கிறது. வாழ்வதற்காக தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதில் காட்டும் உறுதியாலும், தன்னை ஆசைநாயகியாக்கிக் கொள்ள விரும்புகிறவனிடம் காட்டும் கோபப் பாய்ச்சலாலும் கவனம் பெறுகிறார்.

குழந்தைகளைக் காப்பாற்ற வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண் என மற்றவர்கள் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து களமாடியிருக்க, பின்னணி இசை காட்சிகளுக்கு முடிந்தவரை பலம் சேர்த்துள்ளது.

ஈழத்தில் போருக்கு பின் தமிழர்கள் படுகிற கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குநர், தமிழர்களை சந்தர்ப்பத்துக்கேற்ப தடம் மாறி தடுமாறுபவர்களாகவும், துரோகிகளாகவும், இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் காட்டியிருப்பதை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், அதுதான் உண்மை நிலை என அதே மண்ணில் வாழ்கிற இயக்குநர் தனது பேட்டிகளில் அடித்துச் சொல்லும்போது மனம் ரணமாகிறது.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this