HomeCinemaஇயக்குநர் கதை சொன்னபோது எனது கதாபாத்திரம் பற்றிய ஐடியாவே பிரமிப்பாக இருந்தது; அதனால்தான் நடித்தேன்! -ஐந்தாம்...

இயக்குநர் கதை சொன்னபோது எனது கதாபாத்திரம் பற்றிய ஐடியாவே பிரமிப்பாக இருந்தது; அதனால்தான் நடித்தேன்! -ஐந்தாம் வேதம் வெப் சீரிஸின் பத்திரிகையாளர் கதைநாயகி சாய் தன்ஷிகா பேச்சு

Published on

ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கிறது ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ். மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார்.

இந்த சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவிருக்கிறது. முன்னதாக இந்த சீரிஸின் அனைத்து எபிசோடுகளும் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

அதையடுத்து வெப் சீரிஸில் நடித்தவர்கள் மற்றும் உருவாக்க குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் சீரிஸின் கதாநாயகி தன்ஷிகா பேசியபோது, ”உங்களோடு இணைந்து இந்த சீரிஸ் பார்த்தது மகிழ்ச்சி. தாய் மொழியில் மீண்டும் ஒரு படைப்பு, மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஐந்தாம் வேதம் மூலம் மிகச்சிறந்த குழுவுடன் இணைந்து பயணித்து மகிழ்ச்சி. என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, என்னை நம்பி இந்த பாத்திரம் தந்த நாகா சாருக்கு நன்றி. இந்த சீரிஸிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

இயக்குநர் நாகா பேசியபோது, ”ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார். ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பது கதையாக இருக்கும். மக்களுக்கு இந்த சீரிஸ் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.

Latest articles

LCU மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு…. ‘பென்ஸ்’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன்!

தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான...

சிறப்பு அதிகாரியால் நடத்தப்படும் தேர்தலை புறக்கணித்த CTA உறுப்பினர்கள்… பின்னணியில் நடந்தது இதுதான்.

தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் CTA என்று அழைக்கப்படுகிறது. திரு. கே. ராம்நாத் மற்றும் சினிமா, கேமரா, படத்தொகுப்பு,...

ஜூன் 5-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் பேட்ரியாட் திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன்...

ராம்சரண் இந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது! -‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் புச்சி பாபு பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ என்கிற பிரமாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...

More like this