HomeCinemaவிமல், யோகிபாபு நடிப்பில் மஜீத் இயக்கும் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

விமல், யோகிபாபு நடிப்பில் மஜீத் இயக்கும் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

விமல், சாம்பிகா டயானா, யோகிபாபு முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க அப்துல் மஜீத் தயாரித்து இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் துவங்கியுள்ளன.

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக கோர்த்து இந்த படம் உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகியுள்ள இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல் காமெடிப் படமாக இருக்கும்’ என படக்குழு நம்பிக்கை தருகிறது. படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாகும்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: கே. கோகுல்
எடிட்டிங்: ஏ.ஆர்.சிவராஜ்
இசை: பைஜூ ஜேக்கப், இ ஜெ ஜான்சன்
நிர்வாகத் தயாரிப்பு: மு. தென்னரசு, எம்.ரகு கிரியேட்டிவ் ஆர்கனைஸேசன்: பாஸ்கர்
மக்கள் தொடர்பு: வேலு

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this