HomeCinemaகல்வியால்தான் எளிய மக்கள் மேம்பட முடியும் என்பதை பேசுகின்ற படைப்பு இது! -சார் படத்தைப் பார்த்து...

கல்வியால்தான் எளிய மக்கள் மேம்பட முடியும் என்பதை பேசுகின்ற படைப்பு இது! -சார் படத்தைப் பார்த்து படக்குழுவை பாராட்டிய வி.சி.க. தலைவர் திருமாவளவன்

Published on

விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் படம் பார்த்து, படக்குழுவினரை பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

படம் குறித்து அவர் பேசியபோது, நண்பர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சார் திரைப்படம் கல்வியால் தான் எளிய மக்கள் மேம்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம், கல்வி தான் உண்மையான வெளிச்சம், கல்வியால் சமூகம் விடுதலை பெறும் என்பதை, அடிப்படையாக கொண்டு போஸ் வெங்கட் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தில் ஒன்றிப்போய் அருமையாக நடித்துள்ளார்கள். படக்குழுவினர் அனைவரும் இணைந்து, கல்வியின் மகத்துவத்தை பேசும் மிகச்சிறந்த படமாக இப்படத்தை தந்துள்ளார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!” என்றார்.

Latest articles

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

உற்சாகமாய் நடந்த, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி நடிக்கும்  ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’  படத்தின் துவக்க விழா!

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் நடிப்பில், கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ்...

கிராமத்து மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக...

More like this