HomeCinemaபடம் பார்க்க வருபவர்கள் இரண்டு மணி நேரம் சிரித்து விட்டுப் போகலாம்! -'கருப்பு பெட்டி' பட...

படம் பார்க்க வருபவர்கள் இரண்டு மணி நேரம் சிரித்து விட்டுப் போகலாம்! -‘கருப்பு பெட்டி’ பட இயக்குநர் உறுதி

Published on

கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் வெற்றி பெற்று வருகிற சூழலில் அதே விதமான படமாக தயாராகியிருக்கிறது ‘கருப்பு பெட்டி.’ ஜேகே ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ கே.சி.பி. மிதுன் சக்ரவர்த்தி தயாரித்துள்ள இந்த படத்தில் கதைநாயகனாக பரபரப்பான அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் கே.சி.பிரபாத். அவருக்கு ஜோடியாக தேவிகா வேணு நடித்துள்ளார்.

இந்த படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்.

மனரீதியான பிரச்சினை ஒன்றை இதில் பேசியிருக்கிறோம். விமானத்துக்கும், அதன் இயக்கத்தையும் பதிவு செய்கிற கருவி கருப்பு பெட்டி. அதே போன்று இந்தக் கதையிலும் கருப்பு பெட்டி போன்ற முக்கியமான ஒன்றுதான் கதையில் ட்விஸ்ட்டாக இருக்கிறது. அதனால் இந்தத் தலைப்பை வைத்துள்ளோம்.

படம் பார்க்க வரும் பார்வையாளர் மனம் விட்டு இரண்டு மணி நேரம் சிரித்து விட்டு போகலாம். ஏனென்றால் படம் திரையில் ஓடும் நேரமும் இரண்டு மணி நேரம்தான்” என்றார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கே.சி. பிரபாத் ‘பில்லா பாண்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர். அந்த படத்தை தயாரித்ததோடு, படத்தின் திருப்புமுனையான வில்லன் வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’, ‘யாமம்’ ஆகிய படங்களில் நடித்து வருபவர்.

பட வெளியீட்டையொட்டி கருப்பு பெட்டி பட விளம்பர வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விளம்பர சுவரொட்டிகளில் கே.சி.பிரபாத் மற்றும் கதாநாயகி இருவரும் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

”முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்கிறார் கதை நாயகன் கே.சி. பிரபாத்.

படத்தில் சரவண சக்தி, சித்தா ஆர்.தர்ஷன், தேவிகா வேணு, அனிதா, கீர்த்தி, நிஷா, சர்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தை தென்னிந்தியா முழுவதும் கே.சி.பி. புரொடக்க்ஷன்ஸ் வெளியிடுகிறது.

படக்குழு:-
இசை: அருண்
பாடல்கள்: சிற்றரசு
ஒளிப்பதிவு: ஆர்.மோசச் டேனியல்
படத்தொகுப்பு: பாலசிவா
கலை இயக்குநர்: திவாகர்
சண்டைக்காட்சி: ரவிராஜா
நடனம்: மாஸ்டர் சக்ரவர்த்தி

 

Latest articles

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்! -நடிகை பவ்யா திரிகா

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா....

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...

ஸ்ருதிஹாசன் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த...

More like this

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தைத் தரும்! -நடிகை பவ்யா திரிகா

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா....

கார்த்திகை தீபத் திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!

‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் ...