HomeCinemaராம் சரண், இயக்குநர் ஷங்கர் கூட்டணியின் கேம் சேஞ்சர்' ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது!

ராம் சரண், இயக்குநர் ஷங்கர் கூட்டணியின் கேம் சேஞ்சர்’ ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது!

Published on

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள, கேம் சேஞ்சர் திரைப்படம் அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். தமன் இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும்.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது. கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தில் ராம்சரண் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.

அதையடுத்து படம் வரும் ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் அசத்தலான போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest articles

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

ரசிகர்களின் வரவேற்பில் பெரியளவில் ஹிட்டான ‘Lik’ படக்குழுவினரின் உற்சாக கொண்டாட்டம்!

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்...

More like this