HomeCinemaதுல்கர் சல்மானின் லக்கி பாஸ்கரிலிருந்து 'கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி...' ஜீவி பிரகாஷின் இதமான இசையில் வெளியான...

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கரிலிருந்து ‘கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி…’ ஜீவி பிரகாஷின் இதமான இசையில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Published on

துல்கர் சல்மான் ‘மகாநடி’, ‘சீதா ராமம்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியின் மூலம் பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இப்போது அவருடைய நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படம் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசரில் துல்கர் சல்மானின் வசீகரிக்கும் தோற்றம் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது, படத்தில் இருந்து தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் சிங்கிள் ’கொல்லாதே’ பாடலை ஜூன் 19 அன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி… கண்ணாலே சொன்னேனே நூறு சாரி…’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடகர்கள் ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரும் அழகாகப் பாடியுள்ளனர். பாடல் வசீகரிக்கும் வயலின் பகுதிகளுடன் தொடங்கி, புல்லாங்குழல் மெல்லிசையாக மாறி, டிரம் பீட்களால் மெருகேற்றி இசையமைப்பிற்கு கம்பீரத்தை சேர்த்துள்ளது.

கோபத்தில் இருக்கும் மனைவியின் மீதுள்ள கணவரின் பாசத்தை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு பாடல் வரிகளாக எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார். முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் ஸ்டிரிங்க்ஸ் கொண்டு தம்பதியினரிடையே அன்பின் வெளிப்பாட்டை இந்த மெல்லிசையில் கொண்டு வந்துள்ளார். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் அமைக்கப்பட்ட, ’லக்கி பாஸ்கர்’ ஒரு சாதாரண வங்கி காசாளரின் எப்படி அசாதாரண வெற்றிப் பெறுகிறார் என்பதைப் படமாகக் காட்டுகிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி அற்புதமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். திறமைமிகுந்த பங்களான் தயாரிப்பு வடிவமைப்பில் பணியாற்றி உள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தின் எடிட்டிங்கைக் கையாண்டுள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this