HomeCinemaலைக்கா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் லண்டனில் உயிர் தமிழுக்கு படம் பார்த்து பாராட்டு!

லைக்கா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் லண்டனில் உயிர் தமிழுக்கு படம் பார்த்து பாராட்டு!

Published on

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து, கடந்த மே 10-ம் தேதி வெளியான படம் ‘உயிர் தமிழுக்கு.’ ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்தமூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்புவதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆதம்பாவாவிடம் மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து லண்டனில் அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்றார் ஆதம் பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this