HomeCinemaரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சில நொடிகளில்.' ‘புன்னகைப் பூ கீதா' வெளியிடுகிறார்!

ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சில நொடிகளில்.’ ‘புன்னகைப் பூ கீதா’ வெளியிடுகிறார்!

Published on

ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்.’  படத்தை வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தயாரிப்பாளரும் நடிகையுமான ‘புன்னகைப் பூ கீதா’வின் ‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்’ என்ற படத்தை வெளியிடுகிறது.

லண்டனில் உள்ள திருமணமான தம்பதியைச் சுற்றி நடக்கும் மர்ம கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. மத்திய லண்டனில் இருந்து 2 மணி நேரம் தொலைவில் உள்ள செம்ஸ்போர்டு (Chelmsford) என்ற சிறிய நகரத்தில் முழு படமும் படமாக்கப்பட்டுள்ளது.

‘புன்னகை பூ கீதா’ மலேசியாவில் வசிக்கும் தமிழர். ‘ஜீன்ஸ்’, ‘மின்னலே’, ‘அறிந்தும் அறியாமலும்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்து, ஆர்யா உள்ளிட்ட திறமையான நடிகர்களை அறிமுகம் செய்தவர்.

இயக்குநர் வினய் பரத்வாஜ் ஊடக உலகிலும் திரைப்படத் துறையிலும் தேர்ந்த அனுபவம் கொண்டவர். 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வங்கி ஒன்றில் பணிபுரிந்தார். பின்பு, கலர்ஸ் இந்திக்காக ‘சலாம் நமஸ்தே சிங்கப்பூர்’ மற்றும் ஸ்டார் பிளஸ் மற்றும் ஸ்டார் விஜய்க்காக ‘ஸ்டார் டாக் வித் வினய்’ போன்ற வெற்றிகரமான சர்வதேச டாக் ஷோக்களை நடத்தினார். பின்பு அவர் தனது சினிமா பயணத்தை ‘Mundina Nildana’ மற்றும் ஆங்கில வெப் சீரிஸான ‘காபி ஷாட்ஸ்’ மூலம் தொடங்கினார்.

இந்த படத்திற்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் 5 பாடல்கள் உள்ளன. மேலும், ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அவர்கள் – மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி & ரோஹித் மாட் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை பாலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி செய்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் ஏஎம் ஸ்டுடியோவில் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்தில் டிஐ செய்யப்பட்டுள்ளது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this