HomeCinema'தி கோட் லைஃப் ஆடுஜீவிதம்' படத்திற்கான இணையதள வெளியீட்டு விழாவில் படத்தை 'லாரன்ஸ் ஆஃப் அரேபியா'வுடன்...

‘தி கோட் லைஃப் ஆடுஜீவிதம்’ படத்திற்கான இணையதள வெளியீட்டு விழாவில் படத்தை ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’வுடன் ஒப்பிட்டு பாராட்டிய ஏ.ஆர். ரஹ்மான்!

Published on

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் அதிகாரப்பூர்வ இணையதள வெளியீட்டு விழாவின் போதுதான் இந்த விஷயத்தை ரஹ்மான் கூறியுள்ளார். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ரஹ்மான் மேலும் பேசியதாவது, “‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஒரு வகையில் இசையமைப்பாளரின் திரைப்படம். மொத்த டீமும் இந்தப் படத்திற்காக தங்கள் ஆன்மாவைக் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த உழைப்பைப் பார்த்தபோது, சினிமா மீதான எனது நம்பிக்கை மீண்டும் உறுதியானது” என்றார்.

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் எல்லைத் தாண்டிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நாவலாசிரியர் பென்யாமின் எழுதிய இந்த கதையை பிரபல இயக்குநர் பிளெஸ்ஸி படமாக்கியுள்ளார். கதாநாயகனின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க பிருத்விராஜ் சுகுமாரன் தனது இரத்தமும் சதையையும் கொடுத்துள்ளார். இது திரையில் பார்க்கும்போது சினிமா ரசிகர்களை இந்த விஷயம் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும். குறிப்பாக, தொற்றுநோய் கட்டத்தின் போதும் படப்பிடிப்பிற்காக படக்குழு மேற்கொண்ட கடினமான பயணத்தை வெளிப்படுத்தும் காட்சித் தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் திகைப்பூட்டி இந்தப் படத்தின் மீது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 10 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நிலையில், மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியிடப்படும். இந்த நிலையில், இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை படக்குழு அறிமுகப்படுத்தியது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this