HomeCinemaஅஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்... இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

Published on

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பிரேக்பாஸ்ட்’ திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை ‘படிப்பு தான் முக்கியம்’ எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார்.

கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள்:
சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக/ விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார்.

இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து, காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் செம ஸ்கோர் செய்திருக்கிறார்!

அடுத்து, ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தில், வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார்.

தவிர, இரண்டு முக்கிய படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரத் தயாராகிவிட்டார்.

துடிப்பான நடிப்பு, எதார்த்தமான முகம் – தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான ஹீரோவாக வலம் வருவார்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this