Tuesday, November 4, 2025
spot_img
HomeCinemaகே.பி.ஜெகன் இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் சேரன், விக்னேஷ்...

கே.பி.ஜெகன் இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் சேரன், விக்னேஷ் சிவன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்!

Published on

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சேரன், விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது, ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் வடம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.

மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.

Latest articles

“என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் “- ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படத்திற்கான ஸ்டண்ட் காட்சி பயிற்சி பற்றி நடிகை எல்லே ஃபான்னிங்

தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்'ஸில் தனது முன்னணி...

உற்சாகமாய் நடந்த திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழா… ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி...

உண்மைச் சம்பவ பின்னணியில் போஸ் வெங்கட் , கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் கூட்டணி வழங்கும் ‘ஐயம்.’

இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது...

More like this

“என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் “- ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படத்திற்கான ஸ்டண்ட் காட்சி பயிற்சி பற்றி நடிகை எல்லே ஃபான்னிங்

தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்'ஸில் தனது முன்னணி...

உற்சாகமாய் நடந்த திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10-ம் ஆண்டு துவக்கவிழா… ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவிப்பு!

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி...
error: Content is protected !!