HomeCinema‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக வெளிவர இருக்கும்...

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது!

Published on

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில் திரையிடப்படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்பாக அகாடெமி விருது வென்ற இயக்குநர் ஜேம்ஜ் கேமரூனின் தனிப்பட்ட குறுஞ்செய்தியும் ரசிகர்களுக்கு திரையிடப்படும். இதில் அவதாரின் அடுத்த அத்தியாயத்தின் திரைக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளையும் பார்ப்பார்கள்.

சல்லி குடும்பத்துடன் ஸ்பைடர் விண்ட்ரேடர்ஸைச் சேர்ந்த கம்பீரமான மெடுசாய்டுகள், பரந்த ஜெல்லிமீன் போன்ற உயிரினங்களில் பயணிப்பதில் இருந்து இந்த பிரத்யேக காட்சி தொடங்குகிறது. அவர்களுடன் ட்லாலிம் குல தலைவரான டேவிட் தெவ்லிஸின் பெய்லாக் இந்த ஃபிரான்சைஸில் அறிமுகமாகிறார். மேலும், இதில் ஜேக் சல்லி மற்றும் விண்ட்ரேடர்ஸின் புதிய கூட்டணியும் உறுதியாகியுள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்வுப்பூர்வமான விஷயங்கள், அதிர்ச்சியூட்டம் தருணங்கள் என முன்னெப்போதையும் விட இன்னும் ஆழமாக பண்டோராவின் உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த முன்னோட்டம் அழைத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகளை வெளியிடும் முதல் நிகழ்வாக இது அமையும். அதீத எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் நிச்சயம் அமர வைக்கும்.

இந்த அற்புதமான சினிமா அனுபவத்தைத் தவற விடாதீர்கள்! ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பெரிய திரையில் கொண்டாடி பண்டோரா உலகின் எதிர்காலத்தைப் பற்றிய மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this