HomeCinemaமீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு... தயாராகிறது விறுவிறுப்பான திரில்லர்!

மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு… தயாராகிறது விறுவிறுப்பான திரில்லர்!

Published on

ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.

கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார். சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.

முரளி கபிர்தாஸ் தயாரிக்க திட்ட இயக்குநராக விஜயன் ரங்கராஜன், சி.இ.ஒ. டி செல்வகுமார் மற்றும் கிரியேடிவ் ஹெட் பணியை ஈரோடு மகேஷ் ஆகியோர் கவனிக்கின்றனர். இந்தப் படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த கிரைம் திரில்லர் படத்தில் எமோஷனல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாரா திருப்பங்கள் நிறைந்த கதையாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அதற்குள் இயக்குநர் மணி வர்மனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ். அந்த வகையில், இயக்குநர் மணி வர்மன் இயக்கும் புதிய படத்தையும் முரளி கபிர்தாஸ் சார்பில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this