HomeCinemaஅருண் விஜய் நடித்து மகிழ் திருமேனி இயக்கிய 'தடையறத் தாக்க.' ஏஐ மூலம் மெருக்கேற்றப்பட்டு ஜூன்...

அருண் விஜய் நடித்து மகிழ் திருமேனி இயக்கிய ‘தடையறத் தாக்க.’ ஏஐ மூலம் மெருக்கேற்றப்பட்டு ஜூன் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது!

Published on

அருண் விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘தடையறத் தாக்க.’

திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தமன் இசையமைத்திருந்தார். எல். ஆர் ஈஸ்வரி பாடிய ‘பூந்தமல்லி டா’ பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் முழுமையாக நவீன ஏஐ தொழில் நுட்பத்தில் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், ஜூன் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் தடையறத் தாக்க. இப்படம் நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் ஏற்படுத்தி தந்தது.

இந்த படம் தான், இயக்குநர் மகிழ் திருமேனியின் அடையாளமாக அமைந்து இன்று நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் அளவிற்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரௌடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரௌடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப்படத்தின் கதை. இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைக் குவித்தது.

ஒரு ஆக்சன் படத்தின் மொத்த இலக்கணங்களை மாற்றியமைத்து, ரசிகர்களை இறுதிவரை இருக்கை நுனியில் அமர வைத்த இப்படம், திரைக்கு வந்தபோதே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்போதும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this