HomeCinemaஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு...

ஜீ. வி. பிரகாஷ் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து!

Published on

ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.

தற்போது இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பையும், கடலில் மிதக்கும் கப்பல் ஒன்றின் பிரம்மாண்டமும், அதில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், காட்சிகளை மேம்படுத்தும் அதிரடியான பின்னணி இசையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. VFX காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. பார்வையாளர்களுக்கு பரவசமிக்க உணர்வை வழங்கும் என்பதையும் உறுதியளிக்கிறது.

‘கிங்ஸ்டன்’ படத்தின் இந்தி பதிப்பு டீசரை முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகையுமான கங்கணா ரணாவத் வெளியிட்டார். தெலுங்கு பதிப்பு டீசரை முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா வெளியிட்டார்.

‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசரில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...