Published on

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

‘ஹனுமான்’ படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தைத் தொடங்க இருக்கிறார். அவரது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியான இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரிக்க உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரீ-லுக் போஸ்டர், பழங்காலக் கோவிலை நோக்கிச் செல்லும் ஹனுமானைக் கொண்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசீகரிக்கும் போஸ்டர் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நாளை வெளியிடப்படும் பெரிய அப்டேட்டுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த ஹனுமான் கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும், யூகங்களும் இப்போதே கிளம்பியிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் படத்தின் உயர் தரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் புகழ் பெற்றவர்கள். ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் உயர் தயாரிப்பு மதிப்புகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப தரங்களைக் கொண்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this