HomeCinemaதிகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5... ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

Published on

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட ZEE5 தமிழ், இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான கதைகள் மற்றும் முழுமையான பார்வை அனுபவங்களை இந்த ஆண்டு வழங்கத் தயாராக உள்ளது.

2026-க்கான ZEE5 தமிழின் வேகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளில் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பெற்ற பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ZEE5 இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தை உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ZEE5 தமிழ், ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு திகில் நிறைந்த பொழுதுபோக்கை வழங்கும் தனது வாக்குறுதியை மேலும் வலுப்படுத்தும் இந்த கொண்டாட்டம், “ZEE5-இல் இந்த பொங்கல் – திகில் பொங்கல்” என்ற விளம்பர வாசகம் மூலம், இந்த விழாக்காலம் முழுவதும் சஸ்பென்ஸ், பரபரப்பு மற்றும் ஈர்க்கும் கதையாக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

பாரம்பரியமான பொங்கல் கொண்டாட்ட பின்னணியில் அமைந்த இந்த பிராண்ட் திரைப்படம், ஒரு மர்ம சம்பவம் நிகழ்வதன் மூலம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. ஜீவா உறுதியான விசாரணை அதிகாரியாக நடிக்க, ஆண்ட்ரியா அந்த மர்மத்தின் மையக் கதாபாத்திரமாக மாறுகிறார். கதைக்களத்தின் உஷ்ணத்தையும், நியோ நாயர் பாணி திகில் சூழலையும் இணைக்கும் இந்த கதை, 2026-க்கான ZEE5 தமிழின் பலவகை திரில்லர் வகை உள்ளடக்க திட்டத்தை பிரதிபலிக்கிறது.

இந்த பொங்கலிலிருந்து, ZEE5 தமிழ் பார்வையாளர்களுக்கு வலுவான திரைப்பட வரிசையையும் வழங்குகிறது. இதில், விக்ரம் பிரபு மற்றும் L.K. அக்ஷய் குமார் நடித்த விமர்சகர்களால் பாராட்டப்பட்ட “சிறை” திரைப்படம் இடம் பெற்றுள்ளது. மற்றும் பிளாக்பஸ்டர் திகில் திரைப்படமான டிமாண்டி காலனி-யின் இரண்டாம் பாகப் படமும் வெளியாகவுள்ளது. இதோடு, சமுத்திரக்கனி நடித்த “பார்த்த ஞாபகம் இல்லையோ” மற்றும் ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் காயம்குளம் ஆகிய ஒரிஜினல் சீரிஸ்களும் இடம்பெறுகின்றன.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...