HomeCinemaசர்வதேச அளவில் வெர்டிகள் சினிமாவுக்கான விருதுகள் வென்ற 'யுகம்' வெப் சீரிஸ் இப்போது வெர்டிகள் லா...

சர்வதேச அளவில் வெர்டிகள் சினிமாவுக்கான விருதுகள் வென்ற ‘யுகம்’ வெப் சீரிஸ் இப்போது வெர்டிகள் லா சினிமாஸ் யூ டியூப் சேனலில் பார்க்கலாம்!

Published on

குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு, கவிதாபாரதி ஆகியோர் நடித்துள்ள ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்.’ இந்த சீரிஸின்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய குழந்தை வேலப்பன், “இனிவரும் காலத்தில் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெர்டிகள் ஐடியா, என்று சமீபத்தில் நான் கலந்து கொண்ட கான்ஸ் திரைபட விழாவில் வெர்டிகள் சினிமா வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் கலந்து கொண்டது தான் இந்த வெப் சீரிஸ் எடுக்க காரணமாக அமைந்தது.

எந்த பார்மேட்டாக இருந்தாலும் கதை சொல்லும் விதம் தான் அதை ரசிப்பு தன்மைக்குள் கொண்டு செல்லும், ஆரம்பத்தில் இந்த கதையை நான் சொல்லும் பொழுது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அதை எழுதிக் கொண்டு போய் கொடுத்த பொழுது புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.

படம் எடுக்கும் சில சவால்கள் காத்திருந்தது, அதை புரிந்துகொண்டு அதற்காக கேமராமேன் சரவணன்ராமசாம சில மாற்று முறைகள் கையாண்டு சிலவற்றை கற்றுக்கொண்டே மொத்த குழுவும் சேர்ந்து உழைத்து படம் எடுத்து முடித்தோம். உலகம் முழுவதும் வெர்டிகள் சினிமாவுகாக நடக்கும் திரைப்பட விழாவிற்கும் அனுப்பி வைத்தோம். அதில், டொரொண்டோ மற்றும் இத்தாலியில் சிறந்த வெர்டிகள் படம் மற்றும் இந்தப் படத்தில் நடித்ததற்காக என் மனைவிக்கு சிறந்த நடிகைகான விருதும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.

அதன் தொடர்ச்சியாக வெர்டிகள் லா சினிமாஸ் என்ற யூ டியூப் சேனல் ஆரம்பித்து வெளியிட்டுள்ளோம், அதில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பார்க்கலாம், நிச்சயம் பார்வையாளர்களின் ரசிப்பு தன்மையை அடுத்த கட்டத்துக்கு மாற்றும் என்ற நம்பிக்கையுள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.

குழந்தை வேலப்பனின் மனைவி நடிகை நர்மதா, “அவருடன் பல வருடங்களாக பயணித்து வருகிறேன். அவருடைய தோல்விகளைப் பார்த்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து வெற்றி கொடுக்கலாம் என்று உருவாக்கிய கதைதான் இது. என்னை விட அவரது நண்பர்கள் தான் அவருக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள். நீங்களும் கதைக்கு சப்போர்ட் செய்யுங்க” என்றார்.

வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, “இந்தக்கதை ஒரு புதிய முயற்சி. உண்மையான குடும்பப்படம் இதுதான். புது உலகத்தை இந்தக்கதை காட்டும். உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

நடிகர் குரு சோமசுந்தரம், “இந்த கதையை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்க்க ஆரம்பித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டு நடிகர்கள் ஒரே லொகேஷன் வைத்து படம் எடுப்பது கடினமான விஷயம். இந்தக் கதையை வெர்டிகிளாக புது முயற்சியாக கொடுத்துள்ளனர். கலையில் வெற்றி, தோல்வி என்பதே கிடையாது. அதில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதை பார்ப்பதற்கான களமும் அதிகமாகியுள்ளது. அதனால் வெற்றியை மட்டுமே நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதில்லை” என்றார்.

எடிட்டர் சாபு, இசையமைப்பாளர் ஜோவன், இசையமைப்பாளர் மெல்வின், மில்லினியம் மூவிஸ் டத்தோ சிவம், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர் ஹரிகிருஷ்ணன், இயக்குநர் நலன் குமாரசாமி உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...