HomeCinemaநடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற, கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' படத்தின்...

நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற, கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

Published on

‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த கென் கருணாஸ் நாயகனாக நடித்து, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு இயக்கியுள்ள திரைப்படம் ‘யூத்.’
இந்த படம் வரும் மார்ச் 19-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் தனுஷ் பேசியபோது, ”முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். 23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான். கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி.
படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.
அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும்.
இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது,  நான் இப்போது வேண்டாமே என்றேன் ஆனா அதை தவறென்று நிரூபித்திருக்கிறார்.
முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் நடிகர் கென் கருணாஸ் “இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவுகூறுகிறேன் அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கமளித்தவர் அவருக்கு  நன்றி.

தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம்” அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தை தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் நன்றி” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் “இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்” கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.
கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது”. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்” என்றார்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...