HomeCinemaவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…
His Untamed Presence,
Is Your Existential Crisis.
#ToxicTheMovie — உலகளாவிய வெளியீடு 19-03-2026” என்று பதிவிட்டு வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத்  பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.
கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this