HomeCinemaஹாரர் சப்ஜெக்டில் ரசிகர்களை பயமுறுத்தி சிரிக்க வைக்க மே 9-ம் தேதி வெளியாகிறது 'யாமன்.'

ஹாரர் சப்ஜெக்டில் ரசிகர்களை பயமுறுத்தி சிரிக்க வைக்க மே 9-ம் தேதி வெளியாகிறது ‘யாமன்.’

Published on

கே.எஸ்.மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி தயாரித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘யாமன்.’ ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாகவும் அதிரும்படி பயமுறுத்தும் விதமாகவும் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் மே மாதம் 9-ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

கதாநாயகனாக சக்தி சிவன் கதாநாயகியாக காயத்ரி ரேமா வில்லனாக சம்பத்ராம் காமெடியனாக உதயராஜ், இயக்குநர் எல்.ராஜா, ஆதேஷ் பாலா, சம்பத் ராம் திருச்சி சாதனா, ரஞ்சன், அருள் டி.சங்கர், தயாளன், கோவை உமா. பார்த்திபன், இளையராஜா, கோவிந்தராஜ் செல்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு மாநகரத்தையே தன்வசம் வைத்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. மிகப்பெரிய பங்களாவை வேறு ஒருவரிடம் இருந்து மிரட்டி எழுதி வாங்கியுள்ளார். அதே பங்களாவிற்கு இன்றைய ரௌடி ஒருவனும் ஆசைப்படுகிறான். இந்நிலையில் கிராமத்தில் ஒரு பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட, அவளது ஆவி இவர்களையெல்லாம் எவ்வாறு பழி வாங்குகிறது என்பதே கதை. அந்தப் பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டாள், ஹீரோவுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது படத்திற்கு, ”யாமன் என்னும் சொல் ஒருவர் உடலில் புகுந்து தாக்குவதாகும். பேய்க்கு இன்னொரு பெயராக யாமன் என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பயமுறுத்தும். அந்தளவுக்கு கதையும் பின்னணி இசையும் அமைந்துள்ளது. பயமுறுத்துவது மட்டுமல்லாமல் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

படத்தில் பேய் சார்ந்த காட்சிகள் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. அதிரடி சண்டை காட்சிகளை பேய் காட்சிகளுடன் இணைத்திருப்பதால் ஆக்சன் விரும்பிகளையும் இந்த படம் திருப்திபடுத்தும்” என்றார்.

படப்பிடிப்பு சென்னை, கோவை, வேலூர், ஊட்டி, தூத்துக்குடி, நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் 48 நாட்களில் நடந்து முடிந்துள்ளது.

படக்குழு:-

ஒளிப்பதிவு – மாதவன்

இசை – சக்திசாம்

பாடல்கள் – உதய பாலா, சுஜய்

எடிட்டிங் – விக்னேஷ்

சண்டைப் பயிற்சி – ரவிராஜ்

தயாரிப்பு நிர்வாகம் – சசிகுமார்

மக்கள் தொடர்பு – கார்த்திக்

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this