HomeMovie Reviewவித் லவ் சினிமா விமர்சனம்

வித் லவ் சினிமா விமர்சனம்

Published on

காதல் கதைகளை சொல்கிற விதத்தில் சொன்னால் கண்டிப்பாக ஹிட்தான். ‘வித் லவ்’வில் சொன்னவிதம் அசத்தலாக இருக்கவே படக்குழு வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சத்யாவும் (அபிஷன் ஜீவிந்த்) மோனிஷாவும் (அனஸ்வரா ராஜன்) காதல் வசப்பட்டிருக்கிறார்கள். அந்த காதலுக்கு எதிர்ப்பு கிதிர்ப்பு என எதுவுமில்லை. தேதி குறித்து கல்யாணத்துக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கலாம். அதை விட்டுவிட்டு இருவரும் அதிகமாக பேசிப் பழகியதில் சத்யா பள்ளிப் பருவத்தில் ஒரு பெண்ணைக் காதலித்த விவரம் மோனிஷாவுக்கும், மோனிஷா பள்ளிப் பருவத்தில் ஒரு நபரைக் காதலித்த விவரம் சத்யாவுக்கும் தெரியவருகிறது. இருவருக்கும் ‘எக்ஸ்’ இருக்கிறார்கள் என்பதை இருவரும் தெரிந்துகொண்டதில் பிரச்சனையில்லை. அந்த எக்ஸ்களை தேடிக் கண்டுபிடித்து சந்திக்கலாம்; பழைய காதலைச் சொல்லலாம் என முடிவெடுக்கிறார்கள்.

‘அடப் பாவிகளா, எதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்ற எண்ணம் படம் பார்க்கும் நமக்கு வருகிறது. ஆனால், அவர்களோ அப்படியொரு சந்திப்பை விரும்புகிறார்கள். விரும்பியபடியே சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திக்கிறார்கள். அதில் அவர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது; உற்சாகத்துக்கு ஆப்பு வைக்கும்படியான விஷயங்களும் நடக்கிறது. அதையெல்லாம் கடந்து சத்யாவும் மோனிஷாவும் திருமண பந்தத்தில் இணைந்தார்களா? முன்னாள் காதலர்களுடன் கை கோர்த்தார்களா? என்பது திரைக்கதை…

அபிஷன் ஜீவிந்த் இயக்கிய முதல் படமும் ஹிட், ஹீரோவாக நடித்த இந்த முதல் படமும் ஹிட். இதை தக்க வைத்துக்கொள்ள பெரியளவில் சிந்திக்க வேண்டும்; உழைக்க வேண்டும். சிந்திப்பார்; உழைப்பார். அதனால் அடுத்தடுத்தும் வெற்றி சாத்தியம்தான்.

நடிப்பு பொறுத்தவரை காதல், காமெடி, சென்டிமெண்ட் என எல்லாமும் நன்றாக வருகிறது. அவர் உற்சாகத்திலிருக்கும்போது அதை அப்படியே நமக்கு கடத்துகிறார். அவர், தன் காதலி இனி தனக்கு கிடைக்க மாட்டாள் என்ற நிலைமையில் அழும்போது நமக்கு மனம் கலங்குகிறது. காமெடி காட்சிகளில் பாடி லாங்வேஜ் அட்டகாசம். மாஸாக ஆக்சன் அதிரடி, வன்முறை வெறியாட்டம் என இழுத்துப் போட்டுக்கொள்ளாமல் பயணித்தால் ரசிகர்கள் தொடர்ந்து தூக்கி வைத்துக் கொண்டாட வாய்ப்பிருக்கிறது.

ஹீரோயினாக அனஸ்வரா ராஜன். பெமினிசத்தை தொட்டுக் கொண்டு பயணிக்கிற கதாபாத்திரம். அந்த பெமினிச டச்சோடு காதலனை செல்லமாக வெறுப்பேற்றிக் கொண்டேயிருக்கிற, அந்த வெறுப்பேற்றலுக்கான அவனது ரியாக்சனை ரசித்துக் கொண்டிருக்கிற, மற்ற விஷயங்களில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் காதலில் தெளிவாக இருக்கிற அவரது கேரக்டர் கவனிக்க வைக்கிறது. நடிப்பில் கியூட்னஸ் அள்ளுகிறது. அம்மணியிடம் எப்படிப்பட்ட கனமான கதாபாத்திரங்களையும் நம்பிக் கொடுக்கலாம்.

ஹீரோவின் முன்னாள் காதலியாக வருபவரின் நடிப்பும் கவனம் பெறுகிறது. சித்தப்பு சரவணன் உள்ளிட்ட மற்றவர்களிடமிருந்து கதைக்குத் தேவையான பங்களிப்பு கிடைத்திருக்கிறது.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஆடியன்ஸை லவ் மூடுக்கு கொண்டு போகின்றன. பின்னணி இசை கதையோட்டத்தின் தன்மைக்கு உயிரோட்டம் தருகிறது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு தரம்.

’96’ பட ராமும் ஜானுவும் மனதில் பதிந்ததுபோல் சத்யாவும் மோனிஷாவும் மனதில் நிறைகிறார்கள். அதற்காக இயக்குநர் மதனுக்கு பாராட்டுக்கள்!

Rating 4 /5 

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this