HomeCinema250 ட்ரோன்களால் ஒளிர்ந்த 'வித் லவ்' படத்தின் விளம்பரம்... சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள்...

250 ட்ரோன்களால் ஒளிர்ந்த ‘வித் லவ்’ படத்தின் விளம்பரம்… சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பொதுமக்கள் முன்னிலையில் உற்சாகம்!

Published on

‘வித் லவ்’ படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்டமான டிரோன் ஷோ நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையாக நடந்த இந்த ஷோவில் 250 டிரோன்கள் இணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது.
இந்த தனித்துவமான நிகழ்வில், ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this