HomeCinemaசோனியா அகர்வால் நடிப்பில் உறவுகளின் சிக்கல்களையும் பெண்ணின் தியாகத்தையும் பேசும் வில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

சோனியா அகர்வால் நடிப்பில் உறவுகளின் சிக்கல்களையும் பெண்ணின் தியாகத்தையும் பேசும் வில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

Published on

உறவுகளின் சிக்கல்களை விவரித்து ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும் அழகான படைப்பாக, முழுக்க முழுக்க விறுவிறுப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘வில்.’

எஸ் சிவராமன் இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் விக்ராந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார்.

ஒரு குடும்பத்தில் ஒரு வில் அதாவது உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம்.

படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வழக்கறிஞராக பணியாற்றிய எஸ் சிவராமன்,  தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

படக் குழு:- 
வசனம், இயக்கம்: எஸ் சிவராமன்
தயாரிப்பு: Foot Steps Production
இணை தயாரிப்பு: Kothari Madras International Limited
ஒளிப்பதிவு : TS பிரசன்னா
எடிட்டர்: ஜி தினேஷ்
பாடியவர்: கலை குமார்
கலை இயக்குனர்: மணி
நடன இயக்குனர்: அபு & சால்ஸ் சண்டைக்காட்சிகள்: தீ கார்த்திக்
மக்கள் தொடர்பு : வேலு. எஸ்

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this