HomeMovie Review'வித்தைக்காரன்' சினிமா விமர்சனம்

‘வித்தைக்காரன்’ சினிமா விமர்சனம்

Published on

ஹீரோவை சாமர்த்திய கொள்ளைக் காரனான காட்டிய படங்களின் வரிசையில் ‘வித்தைக்காரன்.’

ஹீரோ கட்டுக் கட்டாய் பணத்தைக் கொள்ளையடிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். ஒரு கட்டத்தில் மூன்று முரட்டு தாதாக்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தங்கம், வைரம் என பெரிதாய் தட்டித் தூக்க திட்டமிடுகிறான்.

அவனது திட்டம் நிறைவேறியதா? அந்த தாதாக்களுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? மேஜிக் வித்தைக்காரரான அவன் கொள்ளையடிப்பதில் தீவிரம் காட்டுவதன் காரணம் என்ன? ஓரளவு பரபரப்பான திரைக்கதையில் பதில் சொல்கிறார் இயக்குநர் வெங்கி

ஹீரோ சதீஷ் மேஜிக் என தனியாக எதையும் செய்யாமல், தப்பு தண்டாக்களை மேஜிக் போல் செய்கிறார். போக்குவரத்து நெரிசலை உருவாக்கி, ஏடிஎம் சென்டருக்கு கொண்டு செல்லப்படும் பணத்தை சுருட்டுவதில் காட்டும் புத்திசாலித்தனமும், தொட்டுக் கொடுப்பதன் மூலம் தங்கத்தை செங்கல்லாக்கி செல்லாக் காசாக்குவது மட்டும் ரசிக்கும்படியிருக்கிறது. ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து வைரத்தை கொள்ளையடிப்பதில் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.

ஆனந்தராஜ் காமெடி வில்லனாக வழக்கம்போல் கலகலப்பூட்ட, அவருடன் அல்லக்கைகள் சாம்ஸும், நேபாளி ஒருவரும் சேர்ந்துகொள்வது ரகளை.

புலனாய்வுப் பத்திரிகையாளராக வருகிற சிம்ரன் குப்தா, தன் அறிவைப் பயன்படுத்தி பெரிதாக எதையாவது செய்வார் என எதிர்பார்த்தால் ஊஹூம்…

ஜான் விஜயை பொறுக்கி போலீஸாக பல படங்களில் பார்த்தாயிற்று. மீண்டும் அதேபோல் சில நிமிடங்கள் பார்க்க முடிகிறது.

தாதாக்களாக வருகிற சுப்ரமணிய சிவா, மதுசூதன் இருவரின் நடிப்பில், எற்ற பாத்திரத்துக்கேற்ற கம்பீரம் காணவில்லை.

மாரிமுத்து உள்ளிட்ட மற்றவர்களின் பங்களிப்பும், பின்னணி இசையும் பரவாயில்லை. ஹீரோவின் அறிமுகப் பாடலில் உற்சாகமிருக்கிறது.

வித்தைக்காரன் – பால்வாடிக் குழந்தை.

Latest articles

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

More like this