HomeCinemaதயாரிப்பாளர் தாய் சரவணன் பேரளத்தில் பிரமாண்டமாக உருவாக்கி திறந்த, 'விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ்' புதிய திரையரங்கு!

தயாரிப்பாளர் தாய் சரவணன் பேரளத்தில் பிரமாண்டமாக உருவாக்கி திறந்த, ‘விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ்’ புதிய திரையரங்கு!

Published on

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார்.

புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

விஷ்வா லக்‌ஷ்மி திரையரங்கு, 350 இருக்கைகள் கொண்டது. 7.1 டால்பி அட்மாஸ் தொழில் நுட்பத்தில், அதி நவீன வசதிகள் கொண்டது. திருவாரூர் மாவட்ட சினிமா ரசிகர்களுக்குச் சிறப்பான திரை அனுபவம் தரும் வகையில் இந்த திரையரங்கு உருவாகியுள்ளது.

இத்திரையரங்கத்தைத் துவக்கி வைத்த, பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி ஆகியோர் தயாரிப்பாளர் தாய் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு எனத் தரமான படைப்புகளைத் தயாரித்து தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தாய் சரவணன். அவர் தற்போது நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் வள்ளி மயில் படத்தினை பிரமமாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this