ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 3 பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது திறமையான பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் ஆகியோரின் சாதனைகளைப் போற்றும் வகையில், வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது.
வேலம்மாள் நெக்ஸஸின் சிறப்புமிக்க பள்ளிகளில் ஒன்றான வேலம்மாள் வித்யாலயா, ஆவடி வளாகத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் ஆகியோரின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் திறமையைப் பாராட்டும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவிற்கு வருகை தந்த வித்யா ராம்ராஜ், அவரது தாயார் மற்றும் பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் ஆகியோருக்கு வேலம்மாள் வித்யாலயா, ஆவடி மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவர்கள் அவர்களை பிரம்மாண்டமான அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து, மலர் மாலைகள் அணிவித்து, பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாணவர்களின் உற்சாக வரவேற்பும், பாராட்டு முழக்கங்களும் பள்ளி வளாகம் முழுவதும் விழாக்கோலத்தை ஏற்படுத்தின.
இந்திய விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த வித்யா ராம்ராஜின் வெற்றிக்குப் பின்னால் அவரது விடாமுயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சி முக்கியப் பங்காற்றியுள்ளது. அதேபோல், அவரது திறமையை சரியான முறையில் வழிநடத்தி, சர்வதேச சாதனையாளராக உருவாக்கியதில் அவரது பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
அவர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டும் விதமாகவும், அவர்களின் உழைப்பிற்கு உரிய மரியாதை செலுத்தும் வகையிலும், வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் வித்யா ராம்ராஜ் அவர்களுக்கும், அவரது பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் அவர்களுக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்புமிக்க பாராட்டு நிகழ்வை வேலம்மாள் நெக்ஸஸ் நிறுவனத்தின் Correspondent திரு. M.V.M. வேல்மோகன் அவர்கள் தலைமையேற்று நடத்தி, திருமதி. வித்யா ராம்ராஜ் மற்றும் திரு. நேஹ்பால் சிங் ஆகியோரை கௌரவித்தார்.
விழாவில் பேசிய வேலம்மாள் நெக்ஸஸ் தாளாளர் –
வித்யா ராம்ராஜின் சாதனையை பெருமையுடன் பாராட்டியதுடன், அவரது வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் அவர்களின் பங்களிப்பையும் சிறப்பித்தது.
வித்யா ராம்ராஜின் சாதனை, இளம் தலைமுறையினருக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் உலக அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவரது சாதனை, விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக விளங்குகிறது.
வேலம்மாள் நெக்ஸஸ், கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் திறமைகளையும் ஊக்குவித்து, மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளையும், பயிற்சி வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளை கௌரவித்து, அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பது வேலம்மாள் நெக்ஸஸின் தொடர்ச்சியான செயல்பாடுகளில் ஒன்றாகும்.
இந்தப் பாராட்டு விழா வித்யா ராம்ராஜ் மற்றும் பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் ஆகியோரின் சாதனைகளைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல், இளம் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் கனவுகளையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பெருமைமிகு நிகழ்வாக அமைந்தது.
வித்யா ராம்ராஜ் மற்றும் திரு. நேஹ்பால் சிங் அவர்களுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால சாதனைகள் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.

