HomeCinemaசூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக்...

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

Published on

சூர்யா நடிக்கும் 46-வது படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்.’
பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக  உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு  குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது.
முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.  குடும்பத்தோடு கொண்டாடும்  அசத்தலான திரை அனுபவமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உணர்வுகளும், நெகிழ்ச்சியும், வெகுஜன அம்சங்களும் கலந்த ஒரு பிரம்மாண்ட குடும்பக் கதையான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை ஜூலை மாதம் திரையரங்குகளில் கொண்டாடலாம் !
இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார். எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் மேற்கொள்கிறார்.
தயாரிப்பாளராக சூர்யதேவர நாக வம்ஷீ, சாயி சௌஜன்யா இணைந்து இந்தப் படத்தை உருவாக்குகின்றனர்.  சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் வெளியிடப்படுகிறது.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this