HomeCinemaஅதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘வலை’ படத்தின் டீசர் வெளியானது! 

அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘வலை’ படத்தின் டீசர் வெளியானது! 

Published on

அதர்வா முரளி முதல் முறையாக ‘வலை’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ‘நான்’, ‘அமர காவியம்’ படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=yIUR3EpMteY
திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில் “ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை பேசும் படமாக இது இல்லாமல் பழிவாங்கல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய், ஜெயபிரகாஷ், அருள் டி. சங்கர், துளசி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள நான்கு பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளன. அந்தமான், சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ஒரு பாடலை படமாக்கியுள்ளோம்” என்றார்.
இந்த பழிவாங்கல் கதை மற்ற படங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று இயக்குநர் ஜீவா சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “இதற்கான காரணம் தனித்துவமானது. ‘பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா?’ என்ற கேள்வியை மையமாக வைத்து கதையை படமாக்கியுள்ளோம். கெட்ட மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்கு எதிரான பதிலடி கூட பழிவாங்கலாக மாறுமா என்பதையும் பேசுகிறோம். இந்த விஷயங்களை எல்லாம் அறிவுரையாக இல்லாமல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விப்பதுடன், ஒரு நல்ல கருத்தையும் எடுத்துச் செல்லும். இதற்கு முன்பு ராமேஸ்வரம் பின்னணியில் பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this