HomeCinemaதாங்கள் தயாரித்த படங்களுக்கு தமிழக அரசின் விருது... ரௌடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவன் - நயன்தாரா...

தாங்கள் தயாரித்த படங்களுக்கு தமிழக அரசின் விருது… ரௌடி பிக்சர்ஸ் விக்னேஷ் சிவன் – நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு

Published on

விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி தந்துள்ள அறிக்கை:-
ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களுக்கு பிடித்த வகையிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து தரமான படங்கள் தயாரிப்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய நிறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்படியான நடிகர்களை திரையில் கொண்டு வருவது ஆகியவற்றோடு.
சமூகத்தை பிரதிபலிக்கும் நல்ல கதைகளை திரைக்கு கொண்டு வருவதையும் முன்னிலைப்படுத்தி ரெளடி பிக்சர்ஸ் இயங்கி வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற கூழாங்கல் (Pebbles) திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அதே ஆண்டில் இந்த திரைப்படத்தில் நடித்த செல்லபாண்டி. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார். படத்தின் வலுவான உணர்வுகளையும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமலும் இந்தக் கதையை படமாக்கிய இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் பாராட்டுகள் தெரிவிக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நெற்றிக்கண்’. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய அதன் வலுவான கருத்தை திரையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது.
அதேபோல், சமூக நெறிமுறை கருத்துகளை வலியுறுத்திய ‘அறம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா அவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருப்பதும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெருமையான விஷயம். இப்படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நயினார் அவர்களுக்கும், படத்தை தயாரித்த கோடபாடி ஜே. ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ரௌடி பிக்சர்ஸ் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இந்த படங்கள் அனைத்தும் உருவாக காரணமான இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் அனைவரின் அர்ப்பணிப்பிற்கும் ஆதரவிற்கும் ரௌடி பிக்சர்ஸ் நன்றி தெரிவிக்கிறது.
சமூக பொறுப்புணர்வோடு கூடிய படங்களை தொடர்ந்து தயாரிக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் தொடர்ந்து இயங்க, இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்வுடன் தெரிவிக்கிறது.
அன்புடன்,
விக்னேஷ் சிவன் – நயன்தாரா

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this