HomeCinemaகற்பனையிலிருந்து குற்றம் வரை... காதலில் இருந்து ஆசை வரை... மனம் கவரும் கதைகளின் தொகுப்பான 'வெளவல்ஸ்'...

கற்பனையிலிருந்து குற்றம் வரை… காதலில் இருந்து ஆசை வரை… மனம் கவரும் கதைகளின் தொகுப்பான ‘வெளவல்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on

ரசிகர்களை மெய்மறக்க செய்ய இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகளுடன் வருகிறது ‘வெளவல்ஸ்.’

இந்த படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, காதலில் இருந்து ஆசை வரை, உணர்வுகளில் இருந்து அதற்கு அடிபணிவது வரை என இனிமை – ஆபத்து, தியாகம் – கொடூரம், மாயை – இருள் ஆகிய காதலின் இருபக்கங்களை இந்த திரைப்படம் பேசும்.

திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகளே மொழியின் அடிநாதம். அதுபோல், ’VOWELS’ திரைப்படம் ஐந்து தனித்துவமான கதைகள் மூலம் காதலை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கதையும் ஒரு உயிரெழுத்தை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட உணர்வை பிரதிபலிக்கும்.

A – Attraction (ஈர்ப்பு): முதல் பார்வையிலேயே காதல்- உண்மை, இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு.
E – Emotion (உணர்ச்சி): ஆழமான பிணைப்பு- தியாகம், ஏக்கம், பிரிவு.
I – Intimacy (நெருக்கம்): உடல் மற்றும் மன நெருக்கம்- ஆசை, பற்றுதல், பலவீனம்.
O – Obsession (பிடிவாதம்): இருண்ட காதல்- குற்றம், தனக்கு மட்டுமே என்ற உணர்வு, த்ரில்லர்.
U – Unconditional (நிபந்தனையற்ற காதல்): கட்டுபாடுகளற்ற தூய காதல்- கற்பனை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு.

ஒரு வரைபடம் போல இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு கதையும் தனித்துவமான உணர்வுகளை பேசும். நெருக்கம், ஆசை, இழப்பு, அர்ப்பணிப்பு, மாற்றம் என அனைத்து உணர்வுகளும் இணைந்து காதலை அழகான மொழியாக சித்தரிக்கிறது. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ், நந்து (தெலுங்கு புகழ்), பரத் போபண்ணா, ஷரத் ரவி, விஜயஸ்ரீ, காஜல் சௌத்ரி, சித்து குமரேசன், விஜ்யேதா வசிஸ்ட், பீட்டர் கே, அக்ஷிதா போபையா, பரத் மைலாரி, ஹேமந்த் குமார், தர்ஷினி, பிரியங்கா சந்திரசேகர் மற்றும் அருள் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this