HomeCinemaவிஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் இணையும் பான் இந்திய திரைப்படம்...விரைவில் ஷூட்டிங்!

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் இணையும் பான் இந்திய திரைப்படம்…விரைவில் ஷூட்டிங்!

Published on

இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்கவுள்ளார். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.

இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்திய முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக  உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார். JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா  இணைந்து வழங்குகிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரமாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும்.

படம் பற்றிய மற்ற மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வரவுள்ளன.

Latest articles

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’...

‘டோரதி’ நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது! – நடிகை ஜீவா சுப்பிரமணியம்

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம்...

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4′ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன்...

என்னிடம் ஈகோ இருந்தது; இயக்குநரிடம் என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொன்னேன்! -கில்ட் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கஸ்தூரி ராஜா பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ படக்குழுவினருக்கு கில்ட் தயாரிப்பாளர் சங்கம்...

More like this