HomeCinemaபாலாவின் வணங்கான் படத்தையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை வெளியிடவுள்ள டென்ட் கொட்டா ஓடிடி தளம்!

பாலாவின் வணங்கான் படத்தையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை வெளியிடவுள்ள டென்ட் கொட்டா ஓடிடி தளம்!

Published on

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ தற்போது ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது.

அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்து தமிழ் படங்களை ரசிகர்களின் சொந்த திரைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த ‘வணங்கான்’ திரைப்படத்தை டென்ட் கொட்டா தளத்தில் தற்போது ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இதைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது.

தரமான பொழுதுபோக்கை தமிழ் ரசிகர்களுக்கு கொண்டு வரும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘ராஜாகிளி’ மற்றும் ‘காதல் என்பது பொதுவுடைமை’ படங்களை இந்த வாரம் ஓடிடியில் டென்ட் கொட்டா வெளியிடுகிறது.

மேலும், ‘ஃபயர்’, ‘ஜென்டில்வுமன்’, ‘தினசரி’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ உள்ளிட்ட திரைப்படங்களை டென்ட் கொட்டா விரைவில் ஓடிடியில் வெளியிட்டு தனது சந்தாதாரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளது. இன்னும் பல்வேறு படங்களும் டென்ட் கொட்டா தளத்தில் தொடர்ந்து வெளியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.tentkotta.com என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது டென்ட் கொட்டாவின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடரவும்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this